அன்னூர் பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளும் நிறைவேற்றம் - சட்டப்பேரவைத் தலைவர் தகவல்

கோவை, அக்டோபர் 30: அன்னூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் பொதுமக்கள் வைத்த அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் திரு.ப.தனபால் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டம், அன்னூர் ஊராட்சி ஒன்றியம் அமரர் முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் திரு.டி.என். ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில்  திரு..தனபால் கலந்து கொண்டார். சொக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, கே.ஜி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆணையூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அமரர் முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 530 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6.58 கோடி மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகளை அவர் வழங்கினார். 



பின்னர், அவர் பேசுகையில்,  முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது இந்திய துணைகண்டமே வியந்து நோக்கும் வகையிலான அரிய பல நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அவர் செயல்படுத்தியதிலேயே முத்தாய்ப்பான திட்டம்தான் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம். இத்திட்டம் மற்ற மாநிலத்திற்கெல்லாம் முன்மாதிரியாக உள்ளதொரு திட்டமாகும். மடிகணினி வாயிலாக வகுப்புகளை நடத்தும் நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இப்படியொரு திட்டம் கிடையாது.

ஒரு மாணவன் தனது படிப்பை தொடங்க பள்ளிக்கு வந்தால் போதும், காலணி முதல் கணினி வரையிலான 14 வகை உபகரணங்கள் வழங்கப்படுகின்றது. மேலும், இடைநிற்றலை தவிர்க்க கல்வி ஊக்கத்தொகை, கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுத்தொகை என தமிழகத்திலுள்ள ஏழை, எளிய மாணவர்கள் யாரும் கல்வி கற்க பணம் என்றும் தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கிலே திட்டங்களை தந்தவர் ஜெயலலிதா. அவர்களின் வழியிலே செயல்படும் தமிழகம் அரசும் கல்வி வளர்ச்சித் திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகின்றது. 

அதுமட்டுமல்லாமல், அன்னூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள மக்கள் வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும், எல்லா சூழ்நிலைகளிலேயும் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. அன்னூர் பகுதியில் குடிநீர் தேவையில் பூர்த்தி செய்வதற்கு 2 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவினாசி அன்னூர் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. 

கடந்த முறை நான் அன்னூர் பகுதிக்கு வந்தபோது, பேருந்துகள் கூட்டமாக செல்வதைக் கண்டு கூடுதல் பேருந்துகள் உடனடியாக துவங்கிட அறிவுறுத்தியிருந்தேன். அதனடிப்படையில் இன்று மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் வழியாக திருப்பூர் செல்லவும், கோவை செல்லும் வகையிலும் இரண்டு பேருந்து வழித்தடங்கள் துவங்கப்படவுள்ளது. இதுபோல், நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் மட்டுமல்லாது, உங்களின் தேவைகளை கண்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யும் அரசு ஜெயலலிதாவின் அரசு என்பதை நீங்கள் நினைவில் கொண்டு, விலையில்லா மடிக்கணினிகளை பெற்று, உங்கள் பெற்றோர்களின் கனவை நினைவாக்கும் வகையிலே தமிழகத்தின் முக்கிய பொறுப்புகளை அலங்கரிக்க வேண்டும் என வாழ்த்துக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

இவ்விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திரு.ரூபன்சங்கர்ராஜ், முதன்மை கல்வி அலுவலர் திரு.கணேஷமூர்த்தி, வட்டாட்சியர் திரு.ராஜன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...