நீலகிரியில் வடகிழக்கு பருவமழை குறித்து முதன்மை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் பயிற்சி முகாம்

நீலகிரி, நவம்பர் 1: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வெள்ள நிவாரண மையத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து முதன்மை பொறுப்பாளர்களுக்கான பேரிடர் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் பேசியதாவது:- நீலகிரி மாவட்டத்திற்கு தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரை மற்றும் வடகிழக்கு பருவழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை கிடைக்கப் பெறுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 229 பகுதிகள் அபாயகரமான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே அந்தப் பகுதிகளில் ஒரு குழுவிற்கு 10 பேர் வீதம் தன்னார்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டு தயாராக உள்ளது.



இந்த 229 இடங்களில் அபாயகரமான பகுதிகள் குன்னூர் மற்றும் கோத்தகிரியில் தான் அதிகமாக உள்ளது. சத்ய சாய் பேரிடர் மீட்பு குழுவானது எல்லா மாவட்டங்களிலும் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த நிறுவனம் இந்த வாரம் முழுக்க நீலகிரி மாவட்டத்தில் பணியாற்ற உள்ளனர்.

மழை வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்கள் என 466 இடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு தயார் நிலையில் உள்ளது. பேரிடர் காலங்களில் அவசர கால உதவிக்காக 1077 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

பேரிடர் காலங்களில் அனைத்து அதிகாரிகளும் மிக பொறுப்போடு செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

பின்னர் பேரிடர் காலங்களில் வெள்ளம் மற்றும் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்த ஒத்திகையை அவர் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து கோத்தகிரி அரசு உயர்நிலைப் பள்ளியின் சத்துணவு கூடத்தினையும், பொருட்களின் இருப்பினையும் ஆய்வு செய்தார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...