ரேசன் கடை சர்க்கரை விலை உயர்வுக்குக் கண்டனம் - போராட்டம் நடத்திய வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் கைது

கோவை, நவம்பர் 2: ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் சர்க்கரையின் விலை உயர்வைக் கண்டித்து ரேசன் அட்டைகளைத் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். 

தமிழக குடிமை பொருள் அங்காடிகள் வழங்கப்பட்டு வந்த மானிய விலை சர்க்கரை கிலோ ரூ.13.50 இருந்து ரூ. 25 ஆக உயர்த்தி தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு, பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாகச் சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பு சார்பில் ரேசன் அட்டைகளைத் திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அந்த அமைப்பைச் சேர்ந்தப் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் அத்தியாவசிய பொருட்களை ரேசன் கடைகளில் சரிவர வழங்காததைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, தங்களது ரேசன் அட்டைகளைத் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது, தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களைக் கைது செய்தனர். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...