கோவையில் கந்துவட்டி கொடுமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - கட்சி சார்பற்ற விவசாயிகள் போலீஸ் கமிஷனர், கலக்டரிடம் மனு

கோவை, நவம்பர் 3: கோவை மாவட்டத்தில் தலைவிரித்து ஆடும் கந்து வட்டி கொடுமைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் துறை ஆணையரிடம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். 

இது தொடர்பாக சங்கத்தின் மாநில துணை தலைவர் ஏ.கே.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில் விவசாயத் தொழிலை நம்பி பல விவசாயிகள், சிறு வணிகர்கள் உள்ளனர். விளைச்சலின் போதும் வியாபரத்தின் போதும் அவர்களை நாடும் கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர்கள், நயமாக பேசி பணத்தை கொடுக்கின்றனர். 



தொழிலில் நட்டம் ஏற்படும் போது குறிப்பிட்ட நபர்களால் உடனடியாக பணத்தை திரும்பச்செலுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் கந்து வட்டி கும்பல் அடியாட்களை வைத்து மிரட்டுவதோடு தகாதவார்த்தைகளில் பேசுகின்றனர். இதனால் பலர் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். 

இது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். இதை கருத்தில் கொண்டு இன்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம்.

மேலும், டாஸ்மாக் கடைகள் தவிர சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்க எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம்' என்றார். 

Newsletter

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...