கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்தும் போது விஷ வாயு தாக்கியதில் தங்கப்பட்டறை தொழிலாளர்கள் 3 பேர் பலி

கோவை, டிசம்பர் 22

தங்கப்பட்டறையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்திய 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியாகியுள்ளனர். 

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தங்கப்பட்டறை நடத்தி வருபவர் ரவிசங்கர். 

இன்று காலை தங்கப்பட்டறையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்துமாறு ரவிசங்கர் தனது பட்டறை தொழிலாளர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அங்கு பணிபுரிந்து வந்த சூர்யா, ஏழுமலை மற்றும் கவுரி சங்கர் ஆகிய மூன்று பேரும் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் இறங்கினர். 

அப்போது தொட்டியில் இருந்து விஷ வாயு தாக்கியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இது தொடர்பான தகவல் அறிந்த ஆர்.எஸ்.புரம் போலீசர் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடலையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். 

மேலும், பட்டறை உரிமையாளர் ரவி சங்கர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்துதல் என்ற வழக்கினை பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். 

கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்திய பட்டறை தொழிலாளர்கள் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...