பூட்டிய வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை

திருப்பூர், டிசம்பர் 22

திருப்பூர் அருகே பூட்டிய வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் அருகே உள்ளது சோளிபாளையம். இதன் அருகே உள்ள ஆனந்தா அவென் யூ குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் இதே பகுதியில் குடியிருந்து வருபவர் ராஜேஸ்கண்ணன். பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வரும் ராஜேஸ்கண்ணன் தனது குடும்பதாருடன் நேற்று இரவு 12 மணிக்கு கேரளாவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு காரில் வந்த இரு நபர்கள் பூட்டியிருந்த ராஜேஸ்கண்ணாவின் முன்புற கேட்டை எட்டி குதித்து உள்ளே சென்று கதவை கம்பியால் உடைத்து வீட்டினுள் சென்று மாடியில் இருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த 70 சவரன் நகை மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்துவிட்டு காரில் ஏறி தப்பி சென்றுள்ளனர்.

 இதனிடையே இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த 15 வேலம்பாளையம்  போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 மேலும் அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த குடியிருப்பு பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக காவலாளி பணிக்கு வராததை தெரிந்து கொண்டு திட்டமிட்டே நடைபெற்ற இக்கொள்ளை சம்பவத்தில் வட மாநில கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...