தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் சென்னை சிட்டி எப்.சி அணி வெற்றி

கோவை, டிசம்பர் 22

கோவை நேரு மைதானத்தில் இன்று தொடங்கிய தேசிய அளவிலான ”ஐ லீக்” கால்பந்து போட்டியில் அசத்தலாக விளையாடிய சென்னை அணியின் கால்பந்து வீரர் யுரோஸ் போலிஜினலுக்கு ரூ.25,000 காசோலையை உள்ளாட்சித்துறை  அமைச்சர் எஸ்பி வேலுமணி வழங்கினார்.

இன்றைய முதல் ஆட்டத்தில், சென்னை சிட்டி எப்.சி., கிழக்கு வங்காள கால்பந்து அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடைபெற்றது. 

இந்த போட்டியில், சிறப்பாக விளையாடிய  சென்னை சிட்டி எப்.சி அணி, கிழக்கு வங்காள கால்பந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த 'ஐ லீக்' போட்டிகள் கோவை நேரு மைதானத்தில் வரும் மார்ச் வரை தொடர்ச்சியாக நடக்கவுள்ளது. இதற்காக 4.5 கோடி ரூபாய் செலவில், மைதானம் மேம்படுத்தப்பட்டுள்ளது.  

17 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் நடந்த தேசிய அளவிலான கால்பந்து போட்டியை காண ஏராளமான பொது மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வந்திருந்தனர்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி,  எம்எல்ஏக்கள் பிஆர்ஜி அருண்குமார், அம்மன் கே. அர்ச்சுணன், வீ.சி ஆறுகுட்டி ஆகியோர் போட்டியை நேரில் கண்டு ரசித்தனர். 

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...