விஷவாயு தாக்கி பலியான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத்தருவோம்: ஆய்வுக்குப்பின் துணை ஆட்சியர் பேட்டி

கோவை, டிசம்பர் 23

கோவையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த நகைப்பட்டறை தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தருவதாக பழங்குடியினர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறையின் துணை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தங்கப்பட்டறை நடத்தி வருபவர் ரவிசங்கர். 

இவரது தங்கப்பட்டறையில் பத்தாரயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட கழிவு நீர் தொட்டி ஒன்று உள்ளது. தங்கத்தை சுத்தப்படுத்தும் கெமிக்கல்களை சேகரித்து வைக்க அந்த தொட்டி பயனடுத்தப்படும்.

நேற்று அதிகாலை 1 மணியளவில் தங்கப்பட்டறையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்தி தங்க துகள்களை பிரித்து எடுக்குமாறு ரவிசங்கர் தனது பட்டறை தொழிலாளர்களிடம் கூறியதாக தெரிகிறது.

இதை தொடர்ந்து அங்கு பணிபுரிந்து வந்த ரத்தினபுரி பகுதியை சேர்ந்த ஏழுமலை (23), ராதாகிருஷ்ணன் (28) மற்றும் வேடபட்டியை சேர்ந்த கவுரி சங்கர் (21) ஆகிய மூன்று பேரும் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் இறங்கினர். 

முன்னதாக கவுரிசங்கர் மற்றும் ஏழுமலை ஆகிய இருவரும் தொட்டிக்குள் இறங்கி சுத்தப்படுத்தினர். அப்போது தொட்டியில் இருந்து விஷ வாயு தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



தொட்டிக்குள் சென்ற இருவரும் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த ராதாகிருஷ்ணன் தொட்டிக்குள் பார்த்தபோது இருவரும் மயங்கி கிடப்பதை அறிந்தார். இது குறித்து அந்த நிறுவனத்தின் காவலரான சூர்யா (23) என்பவருக்கு தகவல் கொடுத்தார்.

தொடர்ந்து, சூர்யா-வும் தொட்டிக்குள் இறங்கினார். ஆனால், விஷ வாயு தாக்கியதில் அவரும் பலியானார். இது தொடர்பாக, தீயணைப்புத்துறைக்கும் ஆர்.எஸ்.புரம் போலீசருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் பலியான 3 பேரின் உடலையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இந்த சம்பவத்தில், பட்டறை உரிமையாளர் ரவிசங்கர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

இந்த நிலையில், பணியின் போது உயிரிழந்த ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த பணியாளருக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

பழங்குடியினர் மற்றும் ஆதி திராவிட நலத்துறையின் துணை ஆட்சியர் செந்திவேல் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'உயிரிழந்த 3 பேரில் ஒருவர் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இன்று ஆய்வு நடத்தி வருகிறோம். பொதுவாக இது போன்ற கழிவுகளை அகற்ற மாநகராட்சி அல்லது டவுன் பஞ்சாயத்தின் ஊழியர்களை தான் ஈடுபடுத்த வேண்டும். ஆனால், விதிமீறி பணியாளர்களை கொண்டு சுத்தப்படுத்தியுள்ளனர். 

உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணத்தை நிச்சயமாக நாங்கள் பெற்றுத் தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...