தினமும் தாமதமாக வருவதாக கூறி 5 பேருந்துகளை சிறைபிடித்த கோவை மக்கள்


கோவை, டிசம்பர் 23

அரசுப் பேருந்து தினமும் தாமதமாக வருவதால் சரியான நேரத்திற்கு பள்ளி கல்லூரிக்கு செல்ல முடிவதில்லை என்று கூறி 5 பேருந்துகளை வெள்ளலூர் பகுதி பொதுமக்கள் இன்று காலை சிறைபிடித்தனர்.



வெள்ளலூர் பகுதியில் இருந்து சிங்காநல்லூர் மற்றும் காந்திபுரம் பகுதிக்கு செல்வதற்கு 74 இலக்கமிட்ட 6 பேருந்துகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பேருந்துகள் குறித்த நேரத்திற்கு வெள்ளலூர் பகுதிக்கு வருவதில்லை என்றும் இதனால் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தினமும் தாமதமாகவே செல்லவேண்டி இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், வழக்கம்போல் இன்று காலையும் பேருந்து தாமதமாகவே வந்தது. இதனால் கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் அடுத்தடுத்து வந்த 5 பேருந்துகளையும் சிறைபிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அங்கு சென்ற போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

பொதுமக்களின் இந்த திடீர் பேராட்டத்தால் வெள்ளலூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...