கொண்டாட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள்

கோவை, டிசம்பர் 24

பரபரப்பாக நடந்து முடிந்த ஆர்.கே நகர் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. சுமார் நாற்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில், சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.



இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் தினகரனின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

கோவை மாநகரின் முக்கிய பகுதிகளிலும் தினகரனின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக கோஷமிட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.



ஆர்.கே நகர் தொகுதி வெற்றி குறித்து, அ.இ.அ.தி.மு.க(அம்மா அணி)யின் கோவை மாவட்ட கழக செயலாளர் N. சின்னதுரை கூறியதாவது, ‘புரட்சி தலைவி அம்மா வெற்றி பெற்ற தொகுதியில், அண்ணன் தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பது எங்களுக்கு பெரும் உற்ச்சாகத்தை அளித்திருக்கிறது. இந்த வெற்றி நாங்கள் எதிர்பார்த்த ஒன்று தான். காரணம், இருபது நாட்களுக்கு மேல் ஆர்.கே. நகர் தொகுதியில் மக்களை நேராடியாக சந்தித்து பணியாற்றினோம். அப்பொழுது மக்களின் பேராதரவு அண்ணன் தினகரனின் பக்கம் மட்டுமே இருப்பதை தெரிந்து கொண்டோம். இன்று அது உறுதி செய்யப்பட்டுள்ளது. காலை முதலே மற்ற கட்சி நிர்வாகிகள் என்னை அழைத்து, தினகரனுக்கு ஆதரவாக தாங்களும் பணியாற்ற வருவதாக விருப்பம் தெரிவித்து வருகின்றனர். கூடிய விரைவில் எங்கள் அணியிலிருந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பவுள்ளனர். நாங்கள் யாரையும் மறுக்காமல், அனைவரையும் சேர்த்து கொண்டு அ.தி.மு.க வை அசைக்க முடியாத கட்சியாக உருவாக்க முயற்சி செய்வோம்’ என்று கூறினார்.

மேலும், ‘தி.மு.க தான் எங்களின் போட்டியாளர்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால், அவர்களின் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தமிழகத்தில் இனிமேல் தி.மு.க வெற்றி பெற வாய்ப்பேயில்லை’ என்றும் தெரிவித்தார்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...