பஞ்சாலைகளில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு

கோவை, டிசம்பர் 25

பஞ்சாலைகளில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கு மற்றும் ஆலோசனை முகாம் கோவையில் நடைபெற்றது.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஏராளமான பஞ்சாலைகள் மற்றும் நூற்பாலைகள் செயல்படு வருகின்றன. 

இங்கு பணி புரியும் பெண்கள் நாள் தோறும் பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். 

அவ்வாறு பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு நாள் கருத்தரங்கு மற்றும் ஆலோசனை முகாம் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. 

கோவை பெண் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் சமூக கல்வி மற்றும் வளர்ச்சி மையம் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் சமூக கல்வி மற்றும் வளர்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குனர் C. நம்பி, கோவை தொழிலாளர் நல நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் K. சுப்ரமணியன், தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் இணை செயலாளர் R.தேன்மொழி ஆகியோர் கலந்து கொண்டு, தொழிற்சாலைகளில் பெண்களுக்கு உள்ள பிரச்சனைகள், உரிமைகள், ஊதிய முரண்பாடுகளின் போது பெண்கள் செய்யவேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினர்.



இந்த நிகழ்வில், பெண் வழக்கறிஞர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...