ஸ்மார்ட் சிட்டி தொடர்பான குறிப்பாணை மத்திய அமைச்சரிடம் ஒப்படைப்பு

கோவை மாவட்டத்தை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்துவது தொடர்பான குறிப்பாணையை மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.

கோவை : கோவை மாவட்டத்தை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்துவது தொடர்பான குறிப்பாணையை மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். 



மத்திய வீடு மற்றும் ஊரக மேம்பாட்டுத் திட்ட அமைச்சர் ஹர்தீப் சிங்கை, தமிழக மாநகராட்சி நிர்வாகம்,  கிராம மேம்பாடு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான அமைச்சர் எஸ்.பி. வேலுச்சாமி டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் மேற்கொள்ளவிருக்கும் ஸ்மார்ட் சிட்டி நடவடிக்கைகள் குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது, ஸ்மார்ட் சிட்டி தொடர்பான குறிப்பாணையை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மத்திய அமைச்சரிடம் வழங்கினார். 



அந்தக் குறிப்பாணையில், நாட்டில் அதிக நகரங்கள் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. நகர்ப்புறங்களில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நகர்ப்புற உள்ளூர் நிறுவனங்களின் உதவியுடன் தண்ணீர் வசதி, நிலத்தடி கழிவுநீர், சாலை மற்றும் பல்வேறு வசதிகள் பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 12 நகராட்சிகளும், 124 மாநகராட்சிகளும், 528 டவுன் பஞ்சாயத்துகளும் உள்ளன. இதில், நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட் சிட்டிகளாக தரம் உயர்த்தப்பட உள்ள நகர் பட்டியலில், தமிழகத்தின் 12 நகராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எனது சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...