திருப்பூரில் செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் : மருத்துவமனையில் அனுமதி

திருப்பூரில் விடுதி உணவு ஒவ்வாமையால் செவிலியர் பயிற்சி மாணவிகள் 9 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் விடுதி உணவு ஒவ்வாமையால் செவிலியர் பயிற்சி மாணவிகள் 9 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 



தாராபுரத்தை அடுத்த தெக்காலூரில் செயல்பட்டு வரும் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியில் விடுதி மாணவியர் 60 பேர் இன்று காலை 7 மணிக்கு காலை உணவை முடித்துவிட்டு, பின்னர் கல்லூரி பேருந்தில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்குப் பயிற்சிக்காக சென்றனர். அப்போது, மருத்துவமனை வளாகத்தினுள் வந்து இறங்கிய போது 9 மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால், அவர்களை சக மாணவிகள் மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 



பின்னர், இது தொடர்பாக தகவலறிந்த மருத்துவமனை புறக்காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு மாணவிகளை ஒத்துழைக்க விடாமல் கல்லூரி முதல்வர் தடுத்ததால், மாணவிகளின் பெயரை கூட கூற மறுத்ததோடு சிகிச்சையை பாதியிலேயே விட்டுவிட்டு அதிரடியாக அங்கிருந்து மருத்துவர்களிடம் கூறாமல் கல்லூரி பேருந்தில் ஏற்றிச் செல்ல முயன்றனர்.



இதனைக் கண்ட காவல்துறையினர் பேருந்து ஓட்டுநரை எச்சரித்து, பேருந்தில் இருந்த மாணவிகளை சிகிச்சைக்காக திரும்ப அழைத்து சென்றனர். காலை உணவு ஒவ்வாத நிலையில் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் செய்தி வெளியே சென்றுவிடாமல் தடுப்பதிலேயே கல்லூரி நிர்வாகம் கண்ணும், கருத்துமாக செயல்பட்டது பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...