கோவையில் தொடங்கியது பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு: தன்னார்வலர்கள் பங்கேற்பு

கோவையில் உள்ள வனப்பகுதிகளில் பட்டாம்பூச்சி கணக்கெடுக்கும் பணியைத் தன்னார்வலர்கள் தொடங்கியுள்ளனர்.

கோவை: கோவையில் உள்ள வனப்பகுதிகளில் பட்டாம்பூச்சி கணக்கெடுக்கும் பணியைத் தன்னார்வலர்கள் தொடங்கியுள்ளனர்.

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பட்டாம்பூச்சி பிரியர்கள் கோவைக்கு வந்துள்ளனர்.

கோவை வனத்துறையினர் மற்றும் 'ஆக்ட் ஆப் பட்டர்பிளை' என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் கோவையில் உள்ள வனப்பகுதிகளில் வாழும் பட்டாம்பூச்சிகள் மற்றும் தட்டான் பூச்சிகள் போன்ற உயிரினங்களை கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டது.

அதன் படி, நேற்று கோவை வனக் கோட்டத்தில் இந்த கணக்கெடுப்பு முகாம் தொடங்கியது. இதில், வனத்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து அறிய வகை பட்டாம்பூச்சிகளை கணக்கெடுத்தல், அவற்றைப் புகைப்படம் எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளனர். 



இது தொடர்பாக, பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "கோடைக்காலத்தில் 230 க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள் மற்றும் 79 தட்டாம்பூச்சிகள் இனங்கள் பல பருவங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்போது அறிய வகையிலான பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டன. 

தற்போது நடைபெறும் கணக்கெடுப்பு முகாமில் 35-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் வன ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...