பறிமுதல் செய்யப்படும் வாகனங்களில் இருந்து பொருட்களை கொள்ளையடிக்கும் மர்மகும்பல்

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக போலீஸார் பறிமுதல் செய்யும் வாகனங்களில் இருந்த பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக  உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரால்  பறிமுதல் செய்யும் வாகனங்களில் இருந்த பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



ரேசன் அரசி கடத்தலில் ஈடுபடுபவர்களைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்யும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர், கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்வது வழக்கம். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை வழக்கு முடியும் வரை நிறுத்தி வைக்கப்படும். பல வாகன உரிமையாளர் பறிமுதல் செய்யபட்ட வாகனங்களை திருப்பி எடுப்பதில்லை. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த வாகனங்களை ஏலம் விடப்படுகிறது. அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஏராளமான வாகனங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு எடுத்து செல்லப்பட்டு ஏலம் விடப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரிசி கடத்தலில் ஈடுபட்ட மாருதி வேன் (KL.8.V.5364) பதிவு எண் கொண்ட வாகனத்தைப் பறிமுதல் செய்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர், அதனைக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலகம் அருகே வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலி எழுப்பானை (ஹார்ன்) மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். 

இதேபோல, பல வருடங்களுக்கு முன்பு கைப்பற்றப்பட்ட கார் ஒன்றில் இருந்து டயர் திருடப்பட்டதாகப் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறும்போது, காலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருவர் அங்கு நடமாடி வந்தனர். அதற்கு, முன்னதாக, வேனில் ஒலி எழுப்பான் இருந்ததைக் கண்டேன். கருவூலதிற்கு வந்தவர்களாக இருக்கலாம் என்பதால், அங்கிருந்து சென்று விட்டனர். மாலையில், தன்னுடைய வாகனத்தை எடுக்க வந்தபோது கதவுகள் திறக்கப்பட்ட நிலையில், ஒலி எழுப்பானை திருடி சென்றது தெரிய வந்தது. என்றார்.

பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகனங்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலே நிலவுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...