சுத்திகரிக்கப்படாத குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திருப்பூரில் சாலைமறியல்

சுத்திகரிக்கப்படாத குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திருப்பூர் ராயர்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: சுத்திகரிக்கப்படாத குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திருப்பூர் ராயர்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பல்லடம் அருகே ராயர்பாளையம் அபிராமி நகரில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2 மாதங்ககளாக அப்பகுதிக்கு விநியோகிக்கப்படும் குடிநீருடன் சாக்கடைக்கழிவு நீர் கலந்து வருவதாகப் புகார் எழுந்தது. இதனால் தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல் லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் நிலை ஏறப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இது குறித்து பலமுறை நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த அபிராமி நகர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை ராயர்பாளையம் - திருப்பூர் சாலை சந்திப்பில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார், பொதுமக்களிடம் பேச்சு வார்ததை நடத்தினர். விரைவில் சாக்கடை கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...