நான் எந்த பதிவும் போடவில்லை: அந்தர்பல்டி அடிக்கும் எச்.ராஜா

"பேஸ்புக் பக்கத்தில் பெரியார் சிலை குறித்த கருத்தை நான் பதிவு செய்யவில்லை" என்று எச்.ராஜா அந்தர்பல்டி அடித்துள்ளார்.

கோவை: "பேஸ்புக் பக்கத்தில் பெரியார் சிலை குறித்த கருத்தை நான் பதிவு செய்யவில்லை" என்று எச்.ராஜா அந்தர்பல்டி அடித்துள்ளார். 

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல் தமிழகத்தில் இருந்து பெரியார் சிலை அகற்றப்படும் என்று பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். 

இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனக் குரல்கள் எழுந்தது. 

அரசியல் கட்சி தலைவர்கள் எச்.ராஜா-வுக்கு பகிரங்க மிரட்டல்கள் விடுத்த நிலையில் நேற்று நள்ளிரவு திருப்பத்தூரில் பெரியார் சிலையை பா.ஜ.க. பிரமுகர்கள் சேதப்படுத்தினர். 

இதனால் தமிழகம் முழுவதும் பதற்றமான சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து, பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

பெரியார் சிலை தாக்கப்பட்ட விவகாரத்திற்கு எதிராக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது இன்று அதிகாலை சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். 

இந்த பதட்டமான சூழ்நிலைக்குக் காரணமான எச்.ராஜா, பெரியார் சிலை தொடர்பாக தான் பேஸ்புக் பக்கத்தில் எந்த கருத்தும் பதிவிடவில்லை என்று அந்தர்பல்டி அடித்துள்ளார். 

இது தொடர்பாக அவரது பேஸ்புக் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது :- 

நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் Admin என் அனுமதி இன்றி பதித்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன். 

கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப் படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல. 

ஆகவே ஆக்கப்பூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இணைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது.

இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் எச்.ராஜா கூறியுள்ளார். 

Newsletter

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...