பா.ஜ.க., மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு உத்தரவு

பா.ஜ.க., மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

பா.ஜ.க., மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

பா.ஜ.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மக்களவையில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருகின்றன. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளன.



இன்றைய கூட்டத்தின் போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக எம்.பி.க்களும், சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திர எம்.பி.க்களும் கடும் அமளியில் ஈடுபட்டதால்  நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற முடியவில்லை. எனவே, மக்களவை நாளை (மார்ச் 20) சுமூகமாக நடைபெற்றால், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் தற்போது 536 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதில், 274 உறுப்பினர்களைக் கொண்ட பா.ஜ.க.,வுக்கு, கூட்டணி கட்சிகளின் ஆதரவும் உள்ளதால் பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், மத்திய அரசின் முழு பலத்தையும் காட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை பா.ஜ.க., பெற வேண்டியிருக்கும். ஆனால், சிவசேனா, ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி உள்ளிட்ட சில பா.ஜ.க.,வின் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. இதனால், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பலன் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமின்றி, பா.ஜ.க., மீது அதிருப்தியில் உள்ள அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ.க., மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பின் போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...