ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நீலகிரியில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

சென்னையில் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நீலகிரியில் போராட்டம் நடத்திய அக்கட்சியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி: சென்னையில் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நீலகிரியில் போராட்டம் நடத்திய அக்கட்சியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 



தமிழகத்தில் ரத யாத்திரை வாகனம் நுழைவதைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் ஒருபகுதியாக, சட்டப்பேரவையில் ரத யாத்திரைக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த தி.மு.க.,வினர், செயல்தலைவர் ஸ்டாலினின் தலைமையில் சென்னையில் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்களைக் கைது செய்தனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், ரதயாத்திரை வாகனம் தமிழகத்தில் நுழைந்ததைக் கண்டிக்கும் வகையிலும் நீலகிரி மாவட்ட தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் தலைமையில் நுற்றுக்கும் மேற்பட்டோர் உதகையில் மறியல் செய்யும் போது கைது செய்யப்பட்டனர். இதேபோல, பந்தலூர் பகுதியில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் என மாவட்டம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...