பெண்களுக்கான தெற்கு மண்டல வாலிபால் போட்டி 22-ல் தொடக்கம்

5-வது உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு தெற்கு மண்டல அளவிலான வாலிபால் போட்டிகள் வரும் 22-ம் தேதியிலிருந்து 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கோவை : 5-வது உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு தெற்கு மண்டல அளவிலான வாலிபால் போட்டிகள் வரும் 22-ம் தேதியிலிருந்து 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஊரக கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் தென் மண்டல அளவிலான வாலிபால் போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. 5-வது உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற உள்ள இந்த போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஏழு அணிகள் பங்கேற்கின்றன.

சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகம், காருண்யா பல்கலைக்கழகம், ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் மைசூர், லோட்டஸ் கிளப் சின்ன தடாகம், பி.கே.ஆர். கலை அறிவியல் கல்லூரி மற்றும் திருச்சூர் செயின் ஜோசப் ஆகிய கல்லூரிகளில் இருந்து மாணவிகள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியின் லீக் சுற்றில் முதலிடம் பெறும் இரு அணிகள் இறுதி போட்டியில் விளையாட உள்ளன. 

இதில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.20,000 மற்றும் சுழற்கோப்பையும், இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.15,000, 3-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.10,000, 4-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.5,000 பரிசாக வழங்கப்பட உள்ளது.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...