மேட்டுப்பாளையத்தில் பள்ளி குழந்தைகளுக்கு விவசாய களப்பயிற்சி

விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த மேட்டுப்பாளையத்தில் பள்ளி குழந்தைகளுக்கு நேரடி களப்பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை : விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த மேட்டுப்பாளையத்தில் பள்ளி குழந்தைகளுக்கு நேரடி களப்பயிற்சி அளிக்கப்பட்டது. 

கோவை மாவட்டத்தின் முக்கிய விவசாய பகுதியாக கருதப்படும் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை, சம்பரவள்ளி பகுதியில் விளை நிலங்களுக்கு கோவையை பீளமேட்டில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் இன்று அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சாகுபடி செய்யப்பட்டு வரும் வாழை, சோளம், மற்றும் காய்கறி பயிர்வகைகள் பயிரிடுவது எப்படி? என்பது குறித்தும் விவசாயத்தின் அத்தியாவசியம் பற்றியும் மாணவர்களுக்கு நேரடியாக விளக்கி கூறப்பட்டது. 

மேலும், விவசாயத்தின் உப தொழிலான கால்நடை வளர்ப்பு குறித்தும் பயிற்றுவிக்கப்பட்டது. 

தொலைக்காட்சிகளிலும் இணையங்கள் வழியாக மட்டுமே இதுவரை கண்டு வந்த விவசாய முறைகளை நேரடியாக காணவைப்பதன் மூலம் நம்நாட்டின் முக்கிய மூலதனமே விவசாயம் தான் என்பதை உணர்த்த இயலும் என தெரிவிக்கும் இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

இது குறித்து அந்த பள்ளியின் ஆசிரியை சுதா கூறுகையில், "பள்ளிகளில் ஏட்டு அளவிலும், புகைப்படங்கள் மூலமாகவும் மட்டுமே மாணவர்களுக்கு விவசாயம் சம்பந்தமான பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இந்த களப்பயிற்சியின் மூலம் விவசாயம் நடைபெறும் விதம் மற்றும் விவசாயின் உழைப்பு ஆகியவற்றை நேரடியாகப் பார்க்கும் சூழல் உருவானது. இதன் மூலம் மாணவர்களுக்கு விவசாயம் குறித்த புரிதல் மற்றும் ஆர்வம் அதிகரிப்பதுடன் விளை நிலங்களிலில் ஒரு பொருளை உருவாக்க விவசாயிகள் படும் கஷ்டங்களை மாணவர்கள் புரிந்து கொண்டனர்." என்றார். 

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...