மண்டல அளவிலான பெண்கள் வாலிபால் போட்டி கோவையில் தொடக்கம்

தென் மண்டல அளவிலான பெண்கள் வாலிபால் போட்டி கோவையில் நேற்று தொடங்கியது.

கோவை: தென் மண்டல அளவிலான பெண்கள் வாலிபால் போட்டி கோவையில் நேற்று தொடங்கியது.

தெற்கு மண்டல அளவிலான வாலிபால் போட்டிகள் கோவை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி, லீக் சுற்று முறையில் நடத்தப்பட்டு முதலிடம் பெறும் இரு அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு இரண்டாம் இடம் பெறும் அணிகள் தகுதி பெறும். நேற்று தொடங்கிய இந்த போட்டியை கோவை மாவட்ட வருமான வரித்துறை ஆணையர் லக்‌ஷ்மி ஹந்தே புரி மற்றும் கோவை அரசு கலை கல்லூரி பேராசிரியரும் முன்னாள் கைப்பந்து வீராங்கனையுமான கோதை ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

முதல் போட்டியில் சென்னை ஜே.பி.ஆர் பெண்கள் கல்லூரி மற்றும் கோவை காருண்யா கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது. ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளை பெற்றனர். இதனால், எந்த அணி வெற்றி பெரும்? என்ற பரபரப்பு ஏற்பட்டது. முதல் செட்டில் காருண்யா பல்கலை அணி 26-24 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது செட்டில் ஜே.பி.ஆர் கல்லூரி அணி 25-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாவது செட்டில் காருண்யா பல்கலை அணி 25-23 என்ற புள்ளி கணக்கிலும், நான்காவது செட்டில் 25-21 என்ற புள்ளி கணக்கில் காருண்யா பல்கலை அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

தொடர்ந்து, இன்று மாலை நடைபெறும் முதல் போட்டியில் கேரள செயிண்ட் மேரிஸ் பெண்கள் அணியை எதிர்த்து அவிநாசிலிங்கம் பல்கலை அணி மோதுகிறது. மற்றொரு போட்டியில் பி.கே.ஆர் கோபி செட்டிபாளையம் அணியை எதிர்த்து காருண்யா அணி விளையாடுகிறது.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...