கோவையில் 86 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த முதலமைச்சர்

முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் 86 ஜோடிகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி. பழனிச்சாமி சீர்வரிசை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.


கோவை: முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் 86 ஜோடிகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி. பழனிச்சாமி சீர்வரிசை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

கோவை தொண்டாமுத்தூர் ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.130.46 கோடி மதிப்பில் பவானி கூட்டு குடிநீர் திட்டத்தையும் ரூ.215.51 கோடி மதிப்பிலான ஆத்துபாலம் முதல் உக்கடம் வரையிலான மேம்பால அடிக்கல் நாட்டு விழாவை தமிழக முதலமைச்சர் எடப்பாடி.பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்ட பேரவை துனை சபாநாயகர் ஜெயராமன், மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருமண நடைபெறும் இடத்திற்கு வந்த முதலமைச்சருக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பளித்தனர். விழாவின் தொடக்கத்தில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க 86 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆசீர்வதிக்க நடைபெற இந்த திருமணத்தில், புதிய தம்பதிகளுக்கு கட்டில், பீரோ, மெத்தை, குடம்,உள்ளிட்ட 70 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஐயாயிரதிற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...