படுகர் இன மக்களின் பாரம்பரிய விதைப்பு திருவிழா

நீலகிரியில் அதிகம் வாழும் படுகர் இன மக்களின் பாரம்பரிய விதைப்பு திருவிழா இன்று தொடங்கியது.

நீலகிரி: நீலகிரியில் அதிகம் வாழும் படுகர் இன மக்களின் பாரம்பரிய விதைப்பு திருவிழா இன்று தொடங்கியது.

ஊட்டி. நீலகிரி மாவட்டத்தில் படுகரின மக்கள் ஹட்டி எனப்படும் கிராமங்களில் வசித்து வருகின்றனர். சுமார் 350 க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய ஹட்டி என்றழைக்கப்படும் கிராமங்கள் நான்கு சீமைகளாக பிரிக்கப்பட்டு பொரங்காடு சீமை, தொதநாடு சீமை, மேற்கு நாடு சீமை, குந்த சீமை, என நான்கு சீமைகளாக ஒன்றித்து வாழ்ந்து வருகின்றனர்.

வருடந்தோரும் மார்ச் மாத இறுதியில் படுகரின மக்களால் கொண்டாடப்படும் பாரம்பரிய விதைப்பு திருவிழா இன்று தொடங்கி மறு நாள் காலை விவசாய நிலங்களில் விதை விதைப்பு நடைபெறும். மேற்கு நாடு சீமைக்கு உட்பட்ட 33 படுகரின கிராம மக்கள் ஊட்டி அருகேயுள்ள நஞ்சநாடு, கீழ் அப்புகோடு என்ற கிராமத்தில் உள்ள கோவிலில் ஒன்று கூடி விதைப்பு திருவிழாவுக்காக கொண்டு வரப்பட்ட விதைகளை பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் மேல தால நடனங்களுடன் கோவிலில் வைத்து வழிபாடு செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான விதைப்பு திருவிழா இன்று தொடங்கியது.



இந்த வருடம் விதைக்கப்படும் விதைகள் நல்ல அறுவடையை தரவேண்டும் என்பதோடு, நிறைவான மழை பொழிவுக்காகவும், விவசாயிகள் நலம் காக்க வேண்டியும் வருடந்தோரும் விதைப்பு திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...