தேவலாயங்கள் இடிப்பு, பைபிள் எரிப்பு சம்பவங்களை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தேவாலயங்கள் இடிப்பு, பைபிள் எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது மத்திய மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக கூறி சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: தேவாலயங்கள் இடிப்பு, பைபிள் எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது மத்திய மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக கூறி சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் தேவலாயங்கள் இடிப்பு, பைபிள் எரிப்பு சம்பவங்களை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட கண்டன உரையை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில பொதுச்செயலாளர் மாரிமுத்து, சிசிஐ ஆங்கிலிக்கன் பேராயர் ரெயின்ஹார்டு சேகர், பாஸ்டர் ஜெபராஜ், பிரின்ஸ்பார்னபாஸ், விதனசுகன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் ப.மாரிமுத்து பேசுகையில்:- சமீபகாலமாக சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்கள், கிருஷ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் மீதும் தலித் மக்கள் மீதும் திட்டமிட்டு இந்துத்துவ மதவெறியர்கள் தக்குதல் நடத்துகின்றனர். சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு ஆங்காங்கே இதுபோன்ற சம்பங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது மதுரையில் தேவலாயங்கள் இடித்தும், பைபிளை எரித்தும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களில் தீவிர நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கிறது அல்லது மென்மையான போக்கை கடைபிடிக்கிறது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்ட அகழய்வில் தமிழர்களுக்கு சாதி, மதம் இல்லை என்பது ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த மதமும் சொந்த மில்லாத தமிழகத்தில் அவரவர் விரும்பும் மதத்தை ஏற்றுக்கொள்ள முடியும். இந்தியாவில் நிலவிய சாதி கொடுமைகளின் விளைவாக அன்பை போதித்தவர்களின் மதத்தை கடைபிடித்தனர் என்பது வரலாறு. வன்முறை நடவடிக்கையால், கொடுக்கப்படும் சலுகையால் மக்கள் மதம் மாறவில்லை. சூத்திரனுக்கு கல்வி எதற்கு என்பதை உடைத்து நொருக்கி கல்விச்சாலையை அனைத்து கிராமங்களிலும் திறந்து கல்வி புகட்டியும், மருத்துவமனைகள் திறந்து இலவச மருத்துவம் பார்த்த கிருத்துவத்தின் அன்பைக்கண்டே மக்கள் கிருத்துவ மதத்திற்கு மாறினார்கள் என்பது வரலாறு. அன்பால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்பதை வன்முறையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அனைவரும் சகோதரர்கள் என்கிற ஒற்றுமையோடு வாழும் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்துகிற வன்முறையாளர்களின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோன்ற நடவடிக்கையை தடுத்து நிறுத்தி மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உரையாற்றினார்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...