தபெதிகவினர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை கண்டித்து வரும் 29 ம் தேதி அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த பாலன், ஜீவானந்தம் ஆகிய இருவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது கண்டிக்கதக்கது என்றும் சி.பி.எம் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வி.எச்.பி அமைப்பினர் மீது ஏன் குண்டர் சட்டம் போட வில்லை என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் கேள்வி எழுப்பியுள்ளார்

கோவை: தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த பாலன், ஜீவானந்தம் ஆகிய இருவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது கண்டிக்கதக்கது என்றும் சி.பி.எம் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வி.எச்.பி அமைப்பினர் மீது ஏன் குண்டர் சட்டம் போட வில்லை என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை மாவட்ட பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் கூறியதாவது, பா.ஜ.க அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக காவல் துறை கேட்டுக்கொண்டதால் மூன்று பேரை சரண் அடையவைத்தாகவும், பா.ஜ.க அலுவலகம் தாக்கப்பட்டதை வைத்து மதகலவரத்தை தூண்ட பா.ஜ.க திட்டமிட்டு இருந்ததாக புகார் தெரிவித்தார்.

அதை தவிர்க்கவே மூன்று பேர் சரண் அடைய வைக்கப்பட்டனர். பாலன், ஜீவானந்தம் ஆகிய தபெதிகவினர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது கண்டிக்கதக்கது என்றார். மாவட்ட தலைவர் கார் எரிக்கப்பட்டதற்கும் தபெதிக காரணம் என விடுதலை சிறுத்தைகள்,  தபெதிகவினரை திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் போலீசார் சித்திரவதை செய்து வருகின்றனர்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு சி.பி.எம் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வி.எச்.பி அமைப்பினர் மீது ஏன் குண்டர் சட்டம் போடவில்லை எனவும் கேள்வி எழுப்பினார். பிரச்சினைகளுக்கு மூலகாரணமான ஹெச்.ராசா மீது ஒரு சின்ன வழக்கு கூட இதுவரை போடவில்லை என்றார்.

தபெதிகவினர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை கண்டித்து வரும் 29 ம் தேதி அனைத்து கட்சிகளும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார். காவல் துறை விசாரணை ஒரு சார்பாகவே நடத்தப்படுகின்றது என்றும், கார் எரிக்கப்பட்ட நிகழ்வு உட்கட்சி மோதல் காரணமாக இருக்க கூடும். போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக இது போன்ற செயல்களை அவர்கள்  செய்து இருக்கலாம் எனவும் கூறினார்.

Newsletter

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...