உதகையில் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட நினைவுச் சின்னத்தை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

உதகை சேரிங் கிராஸ் பகுதியில் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட ஆடம் நீருற்று நினைவுச் சின்னத்தை அகற்றுவதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நீலகிரி: உதகை சேரிங் கிராஸ் பகுதியில்  ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட ஆடம் நீருற்று நினைவுச் சின்னத்தை அகற்றுவதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ள மாவட்டமாகும். இங்குள்ள இயற்கை காட்சிகளையும், இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். 

உதகை சேரிங்கிராஸ் பகுதியில் கடந்த 1880-ம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் ரெஜிமென்ட் ஆளுநராக இருந்த வில்லியம் பேட்ரிக் ஆடம் என்பவாரல் நீரூற்று ஒன்று அமைக்கப்பட்டது, அவரது நினைவாக ஆடம் நீருற்றாக தற்போது பாரமரிக்கப்பட்டு வருகிறது. 



குறுகிய நகரமான உதகையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலில் அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்ட மாவட்ட ஆட்சியர் பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் இந்த ஆடம் நீருற்று பகுதியில் உள்ள தடுப்பு கம்பிகள் மற்றும் பூங்காவை அகற்றி பார்க்கிங் செய்ய திட்டமிட்டு நேற்று மக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில்,  கலந்து கொண்ட பொது மக்கள் 130 வருடங்களுக்கும் மேலான பாரம்பரிய சின்னத்தை அகற்றவும் அதன் அழகை சீர்குலைக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபடக்கூடாது என்று கடும் கண்டனங்களை தெரிவித்தனர். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், "பாரம்பரிய சின்னம் என்பதால் இதுகுறித்து மக்களிடையே கருத்து கேட்கும் போது இரு விதமான கருத்துக்கள் கிடைத்தது. மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் கலந்தாலோசித்து இதற்கு ஒரு தீர்வு காணப்படும்." என்றார்.



Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...