உதகையில் சாலையோர பூங்காக்கள் பார்க்கிங் தளமாக மாறுமா?

உதகையில் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ள சாலையோர பூங்காக்களை பார்க்கிங் தளமாக மாற்றி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி: உதகையில் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ள சாலையோர பூங்காக்களை பார்க்கிங் தளமாக மாற்றி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், படகு இல்லம், தேயிலை பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அவற்றைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது போல், உதகை நகரில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. நகரில் போதிய பார்க்கிங் வசதி இல்லாததே இதற்குக் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், நகரை அழகு படுத்தும் விதமாக 5 இடங்களில் சாலையோர பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய பேருந்து நிலையம் அருகேயும், போஸ் திடல் அருகேயும் பூங்கா அமைக்க சுமார் ரூ. 2.5 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.



ஆனால், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த பூங்காக்கள் புதர் செடிகள் முளைத்தும், நாற்காலிகள் சேதமடைந்தும் காணப்படுகின்றன. இந்த 5 பூங்காக்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி மறுத்து பூட்டியே காணப்படுகிறது.



தற்போது போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கும் உதகை நகரில் போதிய பார்க்கிங் வசதி இல்லாமல் உள்ள நிலையில், பராமரிப்பு இல்லாத சாலையோர பூங்காக்களை அகற்ற வேண்டும் என்றும், மேலும் அவற்றை பார்க்கிங் தளமாக மாற்றினால் பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுவதோடு, நகராட்சிக்கும் வருவாய் கிடைக்கும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், நகராட்சி நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்தால் வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் பயனடைவார்கள் என்றும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...