திருப்பூரில் சொத்துக்காக கணவன்-மனைவியை கொன்றவருக்கு இரட்டை ஆயுள்

சொத்து, வழிதடப் பிரச்சனை காரணமாக கணவன், மனைவியை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி திருப்பூர் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.


திருப்பூர்: சொத்து, வழிதடப் பிரச்சனை காரணமாக கணவன், மனைவியை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி திருப்பூர் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

நல்லூர் கிராமம் மானூர் ரெட்டியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி, வள்ளியம்மாள் தம்பதியினர். இவர்களது தோட்டத்தின் அருகில் ரகுவரன் மற்றும் மகேஸ்வரன் என்பவர்களுக்குச் சொந்தமான நிலம் உள்ளது.

இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு இருதரப்பினரிடையே சொத்து சம்பந்தமாகவும், வழித்தடம் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. இதில் ராகுவரனும், மகேஸ்வரனும் சேர்ந்து பழனிச்சாமி, வள்ளியம்மாள் தம்பதியினரை கடுமையாக தாக்கி கொலை செய்தனர். இது குறித்து, திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை செய்த இருவரையும் கைது செய்தனர்.



தொடர்ந்து, வழக்கு விசாரணையில் இருக்கும் பொழுதே குற்றம் நிரூபிக்கப்படும் என்பதை அறிந்த மகேஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், ஜாமீனில் வெளியே வந்த ரகுவரன் வழக்கில் ஆஜராகாமல் 2015-ம் ஆண்டு வரை தலைமறைவாக இருந்தார். தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளியை பிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி கூறியதை தொடர்ந்து ரகுவரன் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, மீண்டும் ஜாமினில் வெளிவந்த ரகுவரனுக்கு நேற்று திருப்பூர் இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, ரகுவரனுக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.6 ஆயிரம் அபராதமும் வழங்கப்பட்டது.



Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...