கோவையில் பூச்சிகள் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

நாட்டின் மிகப்பெரிய பூச்சிகள் அருங்காட்சியகத்தை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

கோவை: நாட்டின் மிகப்பெரிய பூச்சிகள் அருங்காட்சியகத்தை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.



கடந்த 2014-ஆம் ஆண்டு கோவையில் பூச்சி அருங்காட்சியகம் அமைக்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். இதற்காக ரூ. 5 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. சுமார் 6,691 சதுரஅடி பரப்பளவில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பூச்சிகள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று திறந்து வைத்தார்.



இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "இந்த அருங்காட்சியகம் அமைய உறுதுணையாக இருந்த வேளாண் பல்கலை.,யின் விவசாய பூச்சிகள் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த அருங்காட்சியகம் எதிர்கால பூச்சிகள் குறித்த ஆராய்ச்சிக்கு பெரும் வரமாக இருக்கும். இந்த அருங்காட்சியகத்தில் பார்வையிடும் விவசாயிகள், பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை அறிந்து கொள்ள முடியும்." என்றார். 



இந்த அருங்காட்சியகத்தில் 22,122 இனங்களைச் சேர்ந்த 84 ஆயிரம் பூச்சிகளின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகள், பூச்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா மட்டுமின்றி வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பூச்சி இனங்களும், ஒட்டுண்ணிகளும் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தில் கண்ணாடிக் கூண்டில் பூச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பூச்சிகளுக்கு அருகே அதன் மேல்புறம் உள்ள எல்.இ.டி. திரையில், அந்தப் பூச்சிகளின் வகை, அவற்றின் நன்மை - தீமைகள், அவற்றை எந்தெந்த நாட்டில் பார்க்கலாம் உள்ளிட்ட விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காட்டுகின்றன.



மேலும் பூச்சிகளுக்காக வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள், நாணயங்கள், அதை வெளியிட்ட நாடுகள், பூச்சிகள் குறித்து உலக அளவில் வெளிவந்திருக்கும் நூல்கள், தோண்டி எடுக்கப்பட்ட இரண்டு பெரிய கரையான் புற்றுகள் போன்றவை எல்லாம் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வெளிவாயிலில் தேனீக்கள் வளர்க்கும் பண்ணையும் உருவாக்கப்பட்டுள்ளது. 



Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...