சுகாதாரத் துறை கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து: வாக்களிக்க வந்தவர்கள் ஏமாற்றம்

கோவை: கோவையில் இன்று நடைபெற இருந்த பொது சுகாதாரத் துறை கூட்டுறவு சங்க தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டதால், வாக்களிக்க வந்த ஊழியர்கள் ஏமாற்றமடைந்தனர்.

கோவை: கோவையில் இன்று நடைபெற இருந்த பொது சுகாதாரத் துறை கூட்டுறவு சங்க தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டதால், வாக்களிக்க வந்த ஊழியர்கள் ஏமாற்றமடைந்தனர்.

பொது சுகாதாரத் துறை பணியாளர் கூட்டுறவுக்கான சிக்கண மற்றும் நாணய சங்க தேர்தல் கோவையில் இன்று நடைபெற இருந்தது. நிர்வாக குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் 23 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் வாக்களிக்க 350-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வேட்பாளர்கள், வாக்காளர்கள் வந்த நிலையில் தீடீரென தேர்தல் நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் தேர்தல் ரத்து செய்வதாக தேர்தல் அதிகாரி சார்பில் ஒட்டப்பட்ட நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலையீடு காரணமாக இந்த தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கும் ஊழியர்கள், தேர்தலை அறிவித்தபடி நடத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக சுகாதாரத் துறை பணியாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...