அரசு - தனியார் பேருந்து ஊழியர்களிடையே தகராறு : ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராற்றால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராற்றால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சேவூர் செல்லும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும், அன்னூர் செல்லும் அரசு பேருந்து ஊழியர்களுக்கும் இடையே யார் முதலில் செல்வது என்பதில் தகராறு ஏற்பட்டது. இதனால், இரு பேருந்து ஓட்டுநர்களும் தங்களது பேருந்துகளை புதுமார்க்கெட் வீதியில் நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறுகிய பாதை கொண்ட இப்பகுதியில் வேறு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாமல் தவித்தனர். ஆனால், இதனைப் பொருட்படுத்தாமல், இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பின்னர், இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்த இந்தப் போராட்டத்திற்கு பிறகு, அவர்கள் அங்கிருந்து பேருந்தை எடுத்துச் சென்றனர். இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டிய பேருந்து ஊழியர்கள் மீது பொறுப்பை உணர்ந்து நடவடிக்கை எடுக்காமல், போலீசார் வேடிக்கை பார்த்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...