கோவையில் 978 சமரச வழக்குகளுக்கு தீர்வு : நீதிபதி கிருஷ்டோபர்

கோவை : கோவை மாவட்டத்தில் 978 சமரச வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை நீதிபதி கிருஷ்டோபர் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாவட்டத்தில் 978 சமரச வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை நீதிபதி கிருஷ்டோபர் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்ட நீதிமன்ற வளாக அரங்கில் இன்று மாவட்ட சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு முகாம் மாவட்ட முதன்மை நீதிபதி கிருஷ்டோபர் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் அவர் பேசியதாவது :- உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள சமரச மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர்கள் மூலமாகவோ வழக்குகள் சமரச மையத்திற்கு அனுப்பப்படுகிறது. இச்சமரச மையத்தின் மூலம் நேரடியாகவே எதிர்தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. பயிற்சி பெற்ற சமரசர்கள் மூலம் சுமூகமான முறையில் வழக்குகள் முடித்துக் கொள்ள வழிவகுக்கப்படுகிறது. 

மேலும், சமரச மையத்தின் மூலம் தனியறையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை இரகசியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சமரச வழக்கு தரப்பினர்கள் தாங்களே முன்வந்து உண்மை நிலவரத்தை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தீர்வுகள் மிக எளிய முறையிலும் வேகமாகவும் பண விரயமில்லாலும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தீர்வுகளை காண சமரசம் மையங்கள் உதவுகிறது.

கோலை மாவட்டத்தில் இதுவரை மாவட்ட சமரச தீர்வு மையத்தின் மூலம் 2006-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மொத்தம் 5,294 வழக்குகள் பதிவாகி உள்ளது. அதில், 978 சமரச வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மை நீதிபதி கிருஷ்டோபர் தெரிவித்தார். முன்னதாக, இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சமரசம் நாடுவீர் என்ற தலைப்பில் கையேடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...