ஸ்டெர்லைட் ஆலைக்கு தடையில்லா சான்று வழங்க மறுத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

தூத்துக்குடி: பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக வந்த புகார்களை அடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தடையில்லா சான்று வழங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது.

தூத்துக்குடி: பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக வந்த புகார்களை அடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தடையில்லா சான்று வழங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த ஆலையை நிரந்தரமாக தடை செய்யக் கோரி தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தடையில்லா சான்றிதழ்

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம் 1974-1981-ன் கீழ் தடையில்லா சான்றிதழை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியிருந்தது. இந்த தடையில்லா சான்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி புதுப்பித்து வழங்கப்பட்டது. கடந்த மாதம் 31-ம் தேதியுடன் இந்த தடையில்லா சான்றின் காலம் முடிவடைந்தது.

ஆனால், 2 மாதத்திற்கு முன்பாகவே தடையில்லா சான்றை மீண்டும் புதுப்பித்து தர மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் விண்ணப்பித்திருந்தது. அதே நேரத்தில், ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தை தொடங்கியதால், அனுமதி வழங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தயங்கியது.

இந்த நிலையில், தூத்துக்குடி சப்-கலெக்டர் பிரசாந்த் ஸ்டெர்லைட் ஆலையிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அது தொடர்பாக அறிக்கை தயாரித்து அரசுக்கும் அளித்தார். இதற்கிடையே, மார்ச் 29-ந் தேதி திடீரென ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. பராமரிப்பு பணி காரணமாக 15 நாட்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்தது.

தடையில்லா சான்றை மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்கினால் மட்டுமே 15 நாட்களுக்குப் பிறகு தாமிர உற்பத்தியை தொடர முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் வழங்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சிப்காட் நிர்வாகத்துக்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது ஆலை உரிமத்தைப் புதுப்பித்து தரக்கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் வழங்கிய மனுவை மாசுகட்டுபாட்டு வாரியம் ஏற்க மறுத்துள்ளது. மேலும், ஆலையில் தாமிர உற்பத்தி தொடர்பாகவும், அதன் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக வந்த புகார்கள் தொடர்பாகவும் கூடுதல் விவரங்களை அளிக்குமாறும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் கோரியுள்ளது.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...