முன்பதிவற்ற பயணச்சீட்டுகள் வாங்க செயலி அறிமுகம்

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் செல்போன் செயலி மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டுகள் வாங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் செல்போன் செயலி மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டுகள் வாங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

மத்திய ரயில்வே அமைச்சர் அறிவித்திருந்த ‘5 நிமிடங்களில் ரயில்வே டிக்கெட்டுகள்’ திட்டத்தின் படி, ரயில்வே பயணிகள் முன்பதிவற்ற பயணச்சீட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் மற்றும் நடைமேடைச் சீட்டுக்களை “UTS” (அல்லது UTSONMBILE) என்னும் செயலியின் மூலம் வாங்கும் திட்டம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி முதல் தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. 

ஜி.பி.எஸ். அடிப்படையிலான இந்த செயலியை ரயில்பயனாளர்கள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான பணப்பரிவர்த்தனையை ரயில்வேயின் பிரத்யேக ‘R-Wallet’ –ல் ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திலோ அல்லது www.irctc.co.in இணையதளம் மூலமாகவோ மேற்கொள்ளலாம். 

இதுவரை காகிதப் பயணச்சீட்டு இல்லாமல், சென்னை புறநகர் ரயில் சேவைகளில் மட்டும் புழக்கத்தில் இருந்த இந்த செயலி தற்போது தெற்கு ரயில்வே முழுவதும் சுமார் 20 லட்சம் முன்பதிவற்ற பயணச்சீட்டுகள் மூலம் பயணிக்கும் பயணிகளுக்கு (மொத்த ரயில் பயணிகளில் இவர்களது எண்ணிக்கை சுமார் 91 சதவீதமாகும்) உதவும் வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த செயலி மூலம் காகிதம் இல்லாத ரயில் டிக்கெட்டுகளை ரயில்நிலைய வளாகத்தில் இருந்து சுமார் 25 மீட்டர் முதல் 5 கி.மீ. தொலைவுக்குள் பதிவு செய்து தங்களது செல்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து உதவி பெற பயணிகள் முக்கிய ரயில்நிலையங்களில் 24 மணி நேரம் இயங்கும் உதவி மையங்களையோ அல்லது utsonmbile.indianrail.gov.in என்ற இணையதளத்திலோ விபரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...