இழுபறியில் பாலம் கட்டும் பணிகள் : அதிருப்தியில் மக்கள்

திருப்பூர் : திருப்பூரில் மேம்பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

திருப்பூர் : திருப்பூரில் மேம்பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். 

திருப்பூா் பிரதான சாலைகளான அவினாசி சாலை, தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, காங்கேயம் சாலை, ஊத்துக்குளி சாலை மற்றும் மங்கலம் சாலைகளை இணைக்கும் வகையில் 48 கி.மீ. தூரம் ரிங் ரோடு கடந்த 2006-ம ஆண்டு அமைக்கப்பட்டது. 



அதனைத் தொடர்ந்து, ரிங் ரோட்டின் மேற்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பாக முடிவெடுக்கப்பட்டது. அணைப்பாலம் பகுதியில் கட்டப்பட இருந்த அந்த உயர்மட்ட பாலத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் பணி முடிந்தது. ஆனால், அந்த பாலத்துடன் இணைந்து அமைய வேண்டிய ரயில்வே பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. 

நீண்ட இழுபறிக்குப் பின் ரூ. 6.50 கோடி செலவில் கட்டி முடித்திருக்க வேண்டிய பாலம் ரூ. 19.79 கோடியாக மதிப்பீடு உயர்ந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி பாலம் கட்டும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக கடந்த ஆண்டு வேலம்பாளையம் பகுதியில் பணி தொடங்கிய நிலையில், தற்போது வரை பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஒன்றரை ஆண்டில் பாலம் முடிக்க வேண்டிய அந்த பாலம், அதிகாரிகள் அலட்சியம் காரணமாக பாதியில் நிற்கிறது.



இதனால் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள ரிங் ரோட்டை கனரக வாகனங்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், சாலையின் இருபுறமும் உள்ள மக்கள், ரயில்வே வழித்தடத்தை கடக்க 10 கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கால தாமதத்திற்கு, மணல் தட்டுப்பாடு, நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் என்று அதிகாரிகள் காரணம் கூறி, தட்டிக்கழித்து வருகின்றனர்.இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். 

இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், "நொய்யல் ஒட்டியுள்ள பகுதியில் 122 மீட்டர் பணி மீதமுள்ளது. இதில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் நிலம் எடுப்பு பணிகள் தாமதமாவதால், பணியை வேகமாக தொடர முடியவில்லை. விரைவில், உத்தரவு பெற்று பணிகள் தொடங்கப்படும்." என்றனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...