வெள்ளலூர் குப்பைக் கிடங்கை பராமரிக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு

கோவை: வெள்ளலூர் பகுதியில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கை பராமரிப்பதற்காக பிரத்யேக நவீன வகை புல்டோசர் இயந்திரம், ஆளில்லா ட்ரோன் விமானம் மற்றும் நீர் பீய்ச்சி வாகனம் ஆகிய இயந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கோவை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ரூ. 4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


கோவை: வெள்ளலூர் பகுதியில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கை பராமரிப்பதற்காக பிரத்யேக நவீன வகை புல்டோசர் இயந்திரம், ஆளில்லா ட்ரோன் விமானம் மற்றும் நீர் பீய்ச்சி வாகனம் ஆகிய இயந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கோவை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ரூ. 4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநகரில் சேகரிக்கப்படும் 600 மெட்ரிக் டன் அளவிலான குப்பைகள், வெள்ளலூரில் உள்ள குப்பைக் கிடங்கில் சேகரிக்கப்படுகிறது. 650 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த குப்பைக் கிடங்கில் 250 ஏக்கர் பரப்பளவில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றது. இதை சுற்றி ஏராளமான குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன.



தினம்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளில் ஏற்படும் தீ விபத்துகளால் அவ்வப்போது அப்பகுதி முழுவதும் கரும் புகையால் சூழப்படுகிறது, மேலும், மழைக் காலங்களில் குப்பை குவியலில் இருந்து வரும் துர்நாற்றம் குடியிருப்பு வாசிகளை வதைத்து வருகிறது.



குட்டி விமானங்கள்

இதுகுறித்து பேசிய மாநகராட்சி அதிகாரிகள், "வெள்ளலூர் குப்பைக் கிடங்கில், வெப்பத்தினாலும், சமூக விரோதிகளாலும் தொடர்ந்து தீ விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனைக் கண்காணிப்பதற்காக ஆளில்லா குட்டி விமானம் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை வார விடுமுறை நாட்களில் அனுமதியின்றி உள்ளே நுழைபவர்களைத் தடுத்து நிறுத்த உதவும். மேலும், மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களை அளக்கவும் அது பயன்படும். அந்த குட்டி விமானங்கள் சுமார் 6 மணி நேரம் வரை தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டவை. விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்றதும் கண்காணிப்பு பணிகள் தொடங்க உள்ளது. தீ விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்காக நீர் பீய்ச்சி வாகனம் மற்றும் புல்டோசர் இயந்திரம் ஆகியவற்றையும் புதிதாக வாங்க திட்டமிடப்பட்டுள்ளது." என்றார்.

ரூ.4 கோடி

மாநகராட்சி எல்லைக்குள் கொட்டப்படும் 600 மெட்ரிக் டன் அளவிலான திடக் கழிவுகள் குப்பைக் கிடங்கு வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இயற்கை உரம் தயாரிக்கும் ஆலை மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் ஆலையில் சேர்க்கப்படுகின்றது. இது போக 390 மெட்ரிக் டன் அளவிலான கழிவுகள் குப்பைக் கிடங்கு வளாகத்தில் உள்ள திறந்தவெளியில் கொட்டப்படுகின்றது.

இவற்றில் ஏற்படும் தீ விபத்தினால், சுற்றியுள்ள பகுதிகளில் புகை மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது. எனவே, குப்பை கிடங்கு வளாகத்திற்குள் வெளி ஆட்கள் நுழைவதைக் கண்காணிக்கவும், தீ விபத்துகள் ஏற்படும் பகுதிகளை கண்டறியவும், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கான அளவியல் பணிகளை மேற்கொள்ளவும் ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் ஒன்று வாங்க முடிவு செய்யப்பட்டு, இந்நிதியாண்டில் ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீர் பீய்ச்சி வாகனம்

தீ விபத்துகளைத் தடுப்பதற்காகவும், குப்பைகளிலிருந்து உருவாகும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், கொசு மற்றும் ஈ தொல்லைகளைக் குறைப்பதற்காகவும் நுண்ணுயிர் நாசினி கலந்த தண்ணீர், வஜ்ரா/வருண் போன்ற நீர் பீய்ச்சி வாகனங்கள் மூலம் தெளிக்கப்பட்டு வருகின்றது.



தற்சமயம், இந்த பணிக்காக தீயணைப்பு துறை மற்றும் ரிசர்வ் போலீஸ் படையின் அதி விரைவு முகாமிலிருந்து வாகனங்கள் வரவழைக்கப்படுகிறது. அவசரக் காலங்களில் சரியான நேரத்தில் இவை வர முடியாததால் தீ விபத்துகளைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு குப்பைக் கிடங்கு பராமரிப்புக்கென பிரத்யேகமாக நவீன வகை நீர் பீய்ச்சி வாகனம் ஒன்று புதிதாக வாங்குவதற்கு ரூ. 60 லட்சம் இந்நிதியாண்டில் மாநகராட்சி சார்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.

புல்டோசர் இயந்திரம்

தீ விபத்துகளைக் கட்டுப்படுத்தும் வகையில், எரிந்த நிலையில் உள்ள குப்பைகளின் மீது மண் மூடப்பட்டு தீ மேலும் பரவாமல் தடுப்பதற்காக நவீன வகை புல்டோசர் இயந்திரம் ரூ. 300 லட்சம் மதிப்பீட்டில் தமிழக அரசு திடக்கழிவு மேலாண்மை நிதியிலிருந்தோ அல்லது தூய்மை இந்தியா திட்டத்தின் நிதியிலிருந்தோ வரும் நிதியாண்டில் கொள்முதல் செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...