பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மேட்டுப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம்: இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி இன்று மேட்டுப்பாளையத்தில் அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம்: இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி இன்று மேட்டுப்பாளையத்தில் அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை  மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 20-ம் தேதி அதிகாலை இந்து முன்னணியின் நகர துணைச்செயலாளர் தனபால் என்பவரது வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச்சென்றனர். இதில், வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

இது குறித்து வழக்குப் பதிவு செய்திருந்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர் இச்சம்பவத்திற்குக் காரணமானவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...