தனிநபர் கழிப்பறையை அகற்றுமாறு வனத்துறையினர் மிரட்டுவதாக ஆதிவாசி மக்கள் புகார் மனு

நீலகிரி: நீலகிரியில் தனிநபர் கழிப்பறைகளை அகற்றுமாறு வனத்துறையினர் தொடர்ந்து மிரட்டி வருவதாக பெட்ட குறும்பர் ஆதிவாசி இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி: நீலகிரியில் தனிநபர் கழிப்பறைகளை அகற்றுமாறு வனத்துறையினர் தொடர்ந்து மிரட்டி வருவதாக பெட்ட குறும்பர் ஆதிவாசி இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



தெப்பக்காடு பகுதியில் உள்ள கிராமங்களில் பல்வேறு ஆதிவாசி இன மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இதில், யானை கேம்ப்பாடி என்னும் கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு அரசு அறிவித்த சலுகைகள் இதுவரை கிடைத்து வந்தது. வனவிலங்குகள் அதிகமாக அச்சுறுத்தல் உள்ள இந்தக் கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கு ரூ. 12,000-ம், பணி முடியாத நிலையில் இருக்கும் கழிப்பிடம் கட்ட, மேலும் ரூ. 5,000-ம் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் பெற்று இங்குள்ள ஆதிவாசி மக்கள் இப்பணிகளை முடித்தனர்.

இந்நிலையில், வனத்துறை இங்கு கட்டிய கழிப்பிடங்களை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ஆதிவாசி இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது ;- வனவிலங்கு அச்சுறுத்தல் உள்ள எங்கள் கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் வனப்பகுதியில் செல்லாமல் இருக்க தனிநபர் கழிப்பிடம் கட்டியும், அதைப் பயன்படுத்த முடியவில்லை. வனத்துறையினர் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. எனவே, கிராமத்தில் உள்ள கழிப்பிடங்களை வனத்துறையினர் அகற்றக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும், இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...