ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை மூடல்: ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

நீலகிரி: நீலகிரியில் மத்திய அரசின் கீழ் இயங்கி வந்த ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை அதிகாரப்பூர்வமாக மூடப்படுவதாக அறிவித்ததையடுத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி: நீலகிரியில் மத்திய அரசின் கீழ் இயங்கி வந்த ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை அதிகாரப்பூர்வமாக மூடப்படுவதாக அறிவித்ததையடுத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதகையில் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை கடந்த 1981-ம் ஆண்டு அப்போதைய பாரத பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் திறக்கப்பட்டது. பல ஆண்டுகள் இயங்கி வந்த இந்த தொழிற்சாலை, வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தால் நாளடைவில் நலிந்து வரத்தொடங்கியது.

இங்கு இருந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் விருப்ப ஓய்வு அளித்து அனுப்பி வைக்கப்பட்டனர். பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் விருப்ப ஓய்வு வாங்க மறுத்தும், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க கோரியும் சுமார் 165 தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு சென்று வந்தனர். இவர்களுக்கு தொழிற்சாலை நிர்வாகம் பல முறை பணியை விட்டுச் செல்லுமாறு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அவர்கள், தங்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையினை வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.



இந்நிலையில், நேற்று இந்த தொழிற்சாலை உச்ச நீதிமன்றம் உத்தரவின் படி நிரந்தரமாக மூடப்படும் என்று அறிவித்தது. அதன்படி, நேற்று மாலை தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிப்பு பிரசுரம் தொழிற்சாலை வாயிலில் ஒட்டப்பட்டது. இதனையடுத்து 164 பணியாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும், தொழிற்சாலை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து தொழிற்சாலை நிர்வாகம் நாளை முதல் பழைய மாதிரியே பன்ச் அடித்துச் செல்லலாம் என்று கூறியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.



நீலகிரி மாவட்டத்தில் எந்த வித மத்திய, மாநில அரசுகளின் தொழில் நிறுவனங்களும் இல்லாத நிலையில், பல ஆண்டுகள் நீலகிரி மாவட்ட மக்களுக்கு தொழில் வழங்கி வந்த இந்த தொழிற்சாலையும், மூடப்பட்டது நீலகிரி வாழ் மக்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல ஏக்கர் பரப்பளவில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இருந்தும், எந்த பயனும் இல்லாமல் இந்த கட்டிடங்கள் பாழடைந்து போவதுக்குள், நீலகிரி மக்களின் நெடுநாள் கோரிக்கையான மருத்துவக்கல்லூரி அல்லது ஏதேனும் தொழில் நிறுவனமோ இந்த இடத்தில் வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் ஏதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...