யானைகள் மீது அக்கறை காட்டுகிறதா மாநில அரசு?

கோவை: யானை பிரச்சனையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கோவை: யானை பிரச்சனையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் யானை-மனித மோதல்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதே போல், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களிலும் இந்த பிரச்சனை தலை தூக்கியுள்ளது.

இதன் காரணமாக தன்னார்வ அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு கடந்த திங்கட்கிழமை நீதிபதிகள் லோகுர், தீபக் குப்தா ஆகியோரது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு இந்த பிரச்சனையில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, "யானை பிரச்சனைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க கூறி பல்வேறு மாநிலங்களுக்கும் கடிதம் எழுதினோம். ஆனால், கேரளா, மேற்கு வங்காளம், மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் மட்டுமே அதற்கு பதில் கொடுத்தது. தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் அதற்கு பதிலளிக்கவில்லை." என்ற பதிலை கொடுத்தது.

"கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் இந்தியாவில் மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன. யானை-மனித மோதல்கள் அதிகரித்து வரும் இந்த சூழலில், இந்த பிரச்சனையை மெத்தனப் போக்கில் எடுத்துக்கொள்வது ஏற்புடையதல்ல. இந்த விஷயத்தில் மாநில அரசுகளின் செயல்பாடுகள் வருத்தமளிக்கிறது. உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்." என்று நீதிபதிகள் கூறினர்.

இந்த பிரச்சனையில் வன உயிர் அறக்கட்டளை அமைப்பு, "இந்தியா முழுவதும், 70 சதவீத யானை வழித்தடங்கள் பட்டா நிலங்களில் தான் உள்ளன. அவற்றில் கட்டிடங்கள் கட்டப்படுவதற்கு முன்னதாகவே மீட்டிருக்க வேண்டும். புதிய வழித்தடங்கள் உருவாக்குவதைக் காட்டிலும் இதுவே சிறந்த வழிமுறையாக அமைந்திருக்கும். தற்போது, யானை வழித்தடங்களை மீட்பதுவும், அமைப்பதுவும் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்." என்கிறது.

இந்தியா முழுவதும் 11 யானை வழித்தடங்கள் கண்டுபிடித்திருப்பதாக ஆராய்ச்சிக் கட்டுரைகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...