வெளிநாட்டு நோயாளிகளை உணவின் மூலமும் திருப்திபடுத்தும் கோவை மருத்துவமனை

கோவை: கோவையில் உள்ள மருத்துவமனையில் பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் வரும் மக்களின் நலனைக் கருத்தில் அவர்களுக்கு ஏற்ற உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருவது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோவை: கோவையில் உள்ள மருத்துவமனையில் பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் வரும் மக்களின் நலனைக் கருத்தில் அவர்களுக்கு ஏற்ற உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருவது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நமது கோவையின் கலாச்சாரம் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. கடந்த சில நாட்களாக வித்தியாசமான இந்திய உணவுகளில் இருந்து பர்மிஸ் உணவு வகைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இதனையும் மிஞ்சும் வகையில், கடந்த 2 ஆண்டுகளாக மத்திய கிழக்கு (மேற்கு ஆசியா), கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் பெங்காலி உணவு வகைகளைக் கொண்டு கோவை மக்களை சமையற் கலைஞர்கள் கட்டிப் போட்டுள்ளனர். இந்த உணவுகள் எந்த ஓட்டல்களில் கிடைக்கும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா..?.

இந்த ஆப்ரிக்க உணவு வகைகள் வேறெங்கும் கிடைப்பதில்லை, சித்தாபுதூரில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் தான் கிடைக்கிறது. அனுபவமிக்க உணவு சமையற் கலைஞர்களைக் கொண்டு தரமிக்க மத்திய கிழக்கு (மேற்கு ஆசியா), கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் பெங்காலி உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மருத்துவமனைக்கு, பிற மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். எனவே, அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்றவாறு, அவர்களின் பாரம்பரிய உணவுகளை சமைத்து தருவதாக மருத்துவமனை நிர்வாகிகள் கூறுகின்றனர்.



இது குறித்து மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி ஒருவர் கூறியதாவது :- எங்கள் மருத்துவமனைக்கு சார்க் சாடுகள், மேற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆப்ரிக்கா போன்றப் பகுதிகளில் இருக்கும் நாடுகளில் இருந்து ஏராமளான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்கள் ஏற்கனவே, பல்வேறு நோய்களில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மைல் தூரங்களை கடந்து இங்கு வருகின்றனர். எனவே, அவர்கள் அனைத்து சவுகரியங்களையும் உணரும் வகையில், அவர்களின் நாட்டு உணவுகளையே வழங்குகிறோம்.



சர்வதேச உணவுச் சங்கிலின் அடிப்படையில் மருத்துவமனையில் உள்ள சமையலைரையில் சாப்பாடு தயார் செய்யப்படுகிறது. இதற்காக, 20 பேர் கொண்ட குழு இருக்கின்றனர். அந்த உணவுகள் நோயாளிகளின் நோய் தன்மைக்கு ஏற்ற வகையில் அளிக்கப்படுகிறது. நோயாளிக்கு உணவு எந்த அளவு கொடுக்க வேண்டும், எவ்வாறு கொடுக்க வேண்டும் என உணவு கட்டுப்பாட்டு குழுவின் அடிப்படையில் வழங்கப்படுகிறது, எனக் கூறினார்.

இதனிடையே, மருத்துவமனையில் 6 வயது மகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ள கென்யா நாட்டைச் சேர்ந்த பட்டிரிசியா மஹிமா மஃவாசி (38) கூறுகையில், "இங்கு வழங்கப்படும் உணவுகள், நாங்கள் வீடுகளில் இருந்து எடுத்து வருவதைப் போலவே இருக்கிறது. எனக்கு சொந்த ஊர் மொம்பாசா. நாங்கள் அரிசி உணவுகளை அதிகளவில் சாப்பிடுவோம். இங்கு, தாராளமாக அவை கிடைக்கிறது. இங்கு சிகிச்சை, உணவு மற்றும் சுற்றுச்சூழலையும் சவுகரியமாக உணர்கிறேன்,", என்றார்.



ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ஒருநாளைக்கு சாதாரணமாக, 1,800 முதல் 2,000 சாப்பாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. உணவுகள், அதற்கேன தயாரிக்கப்பட்டுள்ள வண்டிகளைக் கொண்டு விநியோகம் செய்யப்படுகிறது. இது போன்ற பிற நாடுகளின் உணவுகளை கோவை மக்கள் ருசிக்கும் வகையில், விரைவில் மருத்துவமனைக்கு வெளியே உணவகங்களை அதன் நிர்வாகம் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...