குடும்பத்தில் ஒருவருக்குத்தான் கட்சி பதவி: ரஜினியின் சிஸ்டத்தில் செட்டிங்

ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் கட்சி பதவி என்றும், குடும்ப அரசியலுக்கு இடமில்லை என்பதே நடிகர் ரஜினியின் அரசியல் கொள்கை என ரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளர் ராஜு மகாலிங்கம் கூறியுள்ளார்.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் கட்சி பதவி என்றும், குடும்ப அரசியலுக்கு இடமில்லை என்பதே நடிகர் ரஜினியின் அரசியல் கொள்கை என ரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளர் ராஜு மகாலிங்கம் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதையடுத்து, ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டது. இதற்கான நிர்வாகிகள் மாவட்டம், நகரம், வட்டம் அளவில் நியமிக்கப்பட்டு உள்ளனர். கோவை, புதுச்சேரிக்கு மட்டுமே நிர்வாகிகள் பட்டியல் வெளியாக வேண்டியுள்ளது. இருப்பினும், அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்படுவதற்கு முன்பு அனைத்து மாவட்ட முக்கிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அகில இந்திய பொறுப்பாளர் சுதாகர், மாநில செயலாளர் ராஜு மகாலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடந்தது. அதன் அடிப்படையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு அவர்களுடைய செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்..?, தொடங்க இருக்கும் புதிய கட்சியை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும்..? என்பது பற்றிய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, இன்று சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு சுதாகர், ராஜு மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்திருந்த முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். அவர்களிடம் மன்ற செயல்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தனர். அடுத்து எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. ரஜினி அமெரிக்காவில் இருந்து திரும்புவதற்குள் மாவட்ட அளவில் செய்ய வேண்டிய பணிகள் என்ன என்பதையும் எடுத்துக் கூறினார்கள்.

கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளர் ராஜு மகாலிங்கம் பேசியதாவது:- அரசியலுக்கு உண்மையான, நேர்மையான, அமைதியான தலைவர் வேண்டும். நமது தலைவர் ரஜினி அப்படிப்பட்ட தலைவராக இருப்பார். அரசியல் என்றால் விமர்சனம் இருக்கத்தான் செய்யும். அதை ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என்று ரஜினி ஏற்கனவே சொல்லி இருக்கிறார். ரஜினியின் கட்சியில் குடும்பத்தில் ஒருவருக்குத்தான் பதவி. இதில், ரஜினி உறுதியாக இருக்கிறார். அவருடைய கட்சியில் குடும்ப அரசியல் என்பது இருக்காது, எனக் கூறினார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...