15 வருடங்களாக தெருவிளக்கு வசதியின்றி தவிக்கும் பொதுமக்கள் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர்: திருப்பூரில் 15 வருடங்களுக்கும் மேலாக தெருவிளக்கு வசதியின்றி தவித்து வருவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூரில் 15 வருடங்களுக்கும் மேலாக தெருவிளக்கு வசதியின்றி தவித்து வருவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி 36-வது வார்டுக்குட்பட்ட பி.ஏ.பி. நகர், கார்த்திக் நகர் பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், சுமார் 15 வருடங்களுக்கு மேலாக தெருவிளக்கு வசதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலைப் பயன்படுத்தி சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் அவ்வழியாக வரும் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுப்பதாகவும் புகார் கூறப்படுகிறது.



இரவு நேரங்களில் தெருவிளக்கு இல்லாததால் வெளியில் வரக் கூட பயமாக இருப்பதாகவும், பள்ளிக் குழந்தைகள் இரவு நேரங்களில் டியூசன் சென்று வரும் போது தனியாக வருவதற்கு பயமாக இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், இப்பகுதிக்கு இதுவரை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியைப் பயன்படுத்தி எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆகையால், மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து உடனடியாக தெருவிளக்குகளை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...