சுந்தராபுரத்தில் கால்வாய் கட்டும் பணியில் தொய்வு: படாதபாடு படும் பொதுமக்கள்

கோவை: கோவை - பொள்ளாச்சி பிரதான சாலையில் அமைந்துள்ள சுந்தராபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகள் தாமதமாக நடைபெறுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கோவை: கோவை - பொள்ளாச்சி பிரதான சாலையில் அமைந்துள்ள சுந்தராபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகள் தாமதமாக நடைபெறுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தெற்கு மண்டலம் வார்டு எண். 98-க்குட்பட்ட சுந்தராபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாயை ஆழப்படுத்தும் பணிகள், இம்மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது. இதற்காக, இருவழிப்பாதையாக இருந்த சாலை, ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கழிவுநீர் கால்வாயை ஆழப்படுத்தும் பணிகளுக்காக, கழிவுநீர் செல்லும் பாதை மண்ணைக் கொட்டி அடைக்கப்பட்டது. ஆனால், கடந்த இரு வாரங்களாக எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி வருகிறது.



மழை பெய்யும் நாட்களில் மழைநீர் கழிவுநீரோடு கலந்து பிரதான சாலையை நீர் குட்டையாக மாற்றிவிடுகின்றன. மேலும், தேங்கி நிற்கும் கழிவுநீர் குட்டை அருகே மின்கம்பங்கள் இருப்பதால், மின்சார விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.



"சுமார் 20 நாட்களுக்கு முன் கழிவுநீர் கால்வாயை ஆழப்படுத்தும் பணிகளை தொடங்கினர், இன்றுவரை நிறைவடையவில்லை. கடை வாசலில் கழிநீர் தேங்கியுள்ளதால் வாடிக்கையாளர்கள் கடைகளுக்குள் வர முடியவில்லை. இதனால், வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் கடைகளை தற்காலிகமாக மூடிவிட்டனர். பல நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி, சுகாதர சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் கொசுத் தொல்லை அதிகமாகியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்த பின்னரும் பணிகள் துரிதப்படுத்தப்படவில்லை, என அவர் படும் இன்னல்களை தெரிவிக்கிறார் மளிகை கடை உரிமையாளர் முருகேசன்.



கடந்த இரு வாரங்களில் இப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வாகன விபத்துகள் ஏற்பட்டுள்ளன. முறையான விபத்து எச்சரிக்கை அறிவிப்புகள் ஏதும் வைக்கப்படாததால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் கழிவுநீர் குட்டைக்குள் சிக்கி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.



பொள்ளாச்சி பிரதான சாலையில் உள்ள குடியிருப்பு மற்றும் கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், சுந்தராபுரத்தை அடுத்துள்ள அண்ணா நகர் வழியாக வடிந்து மதுக்கரைக்கு செல்கிறது. இப்பகுதியில் கால்வாய் வடிகால் அமைக்கப்படும் போதே, ஆழமாக வடிகால்களை அமைத்திருந்தால், சீரமைப்புக்காக ஆகும் செலவுகளையும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களையும் தவிர்த்திருக்கலாம் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.



கழிவுநீர் கால்வாயை ஆழப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, சுகாதார சீர்கேட்டிலிருந்து பொதுமக்களையும், விபத்துகளிலிருந்து வாகன ஓட்டிகளையும் மாநகராட்சி நிர்வாகத்தினர் காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...