பயணிகளின் உயிருடன் விளையாடும் தனியார் பேருந்து ஊழியர்கள்: அதிர்ச்சிகர வீடியோ

கோவை: கோவையில் தனியார் பேருந்தின் ஓட்டுநர் தனது சக ஊழியருடன் ஆபத்துடன் பயணிக்கும் அதிர்ச்சிகர வீடியோ வெளியாகி உள்ளது.


கோவை: கோவையில் தனியார் பேருந்தின் ஓட்டுநர் தனது சக ஊழியருடன் ஆபத்துடன் பயணிக்கும் அதிர்ச்சிகர வீடியோ வெளியாகி உள்ளது.

போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் தனியார் பேருந்து ஓட்டுநர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தனியார் பேருந்து ஒன்று புரூக் பாண்ட் சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் செல்லும் வீடியோ காட்சி வெளியானது. சம்மந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திய நிலையில், கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சுஜித்குமார் உத்தரவின் பேரில், போக்குவரத்து காவலர்கள் அந்த தனியார் பேருந்தின் ஓட்டுநருக்கு ரூ. ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில், மீண்டும் ஒரு அத்துமீறல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

1 A (TN 42 M 5112) என்ற இலக்கமிட்ட தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுநர் இருக்கையின் அருகில் உள்ள ஜன்னலில் அமர்ந்து அந்த பேருந்தின் ஊழியர் ஒருவர் பயணிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 'கரணம் தப்பினால் மரணம்' என்ற நிலையில், பயணம் செய்யும் அந்த ஊழியரால், இருந்தில் பயணிக்கும் மற்றவர்களின் பாதுகாப்புக்கும் கேள்விக்குறி ஏற்பட்டது.



இது போன்ற மீறல்களில் ஈடுபட்டு பொதுமக்களின் உயிருக்கு ஊரு விளைவிக்கும் தனியார் பேருந்து ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....