சுற்றுலா வாகனங்களால் நீலகிரி மக்கள் பாதிப்படைவதை தடுக்க அனுமதி அட்டை அறிமுகம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சீசன் சமயங்களில் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்டத்தில் உள்ள நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா இன்று உதகையில் தொடங்கி வைத்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சீசன் சமயங்களில் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்டத்தில் உள்ள நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா இன்று உதகையில் தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இந்த சமயங்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கில் வருகை புரிவார்கள்.

அவ்வாறு தங்களது சொந்த வாகனங்களிலும், வாடகை வாகனங்களிலும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வருகை தருகின்றனர். இதனால் மாவட்டத்தில் சிறிய நகரங்களான உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரும் வாகனங்கள் குன்னூர் வழியாக ஒரு வழிப்பாதையாக மாற்றி போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இவ்வாறு ஒரு வழிப்பாதையாக மாற்றும் நேரங்களில் உள்ளூர் மக்கள் உதகையில் இருந்து தங்களது கிராமப்புறங்களுக்கோ அல்லது நகரில் சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளுக்கோ செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதனால், உள்ளூர் மக்கள் பாதிக்காத வகையில், உள்ளூர் வாகனங்களின் தகவல் அடிப்படையில் வாகன உரிமையாளர்களுக்கு வாகன அனுமதி அட்டை பெற உரிய உரிம படிவங்களுடன் அருகிலுள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யுமாறு மாவட்ட காவல் துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.



இதன் அடிப்படையில் இன்று உதகையில் உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி அட்டை ஓட்டும் நிகழ்வை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.



அந்த அனுமதி அட்டை ஒட்டப்பட்டுள்ள வாகனங்கள் சீசன் சமயங்களிலும் அவர்கள் செல்லும் பகுதிக்கு காவல் துறையினர் அனுமதி அளிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...