கோவையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானம் : விருந்தினர்களை ஆச்சரியப்படுத்திய திருமண வீட்டார்

கோவை: கோவை மாவட்டம் ஈச்சனாரியில் தொழிலதிபரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட உடல், உறுப்பு தானம் விழிப்புணர்வு நிகழ்வுகள் விழாவிற்கு வந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது.

கோவை: கோவை மாவட்டம் ஈச்சனாரியில் தொழிலதிபரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட உடல், உறுப்பு தானம் விழிப்புணர்வு நிகழ்வுகள் விழாவிற்கு வந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது. 

ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் தொழிலதிபரான இமயவன் - அஞ்சுகம் என்பவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் உடல், உறுப்பு தானம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அரங்கு அமைக்கத் திருமண வீட்டாரின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் உடல், உறுப்பு தானம் குறித்து கேட்டறிந்ததுடன், உடல், உறுப்பு தானம் செய்யவும் பதிவு செய்து கொண்டனர். 

திருமண விழாக்களில் உறவுகளையும், நண்பர்களையும் பார்த்து மகிழ்ச்சியடைவதோடு மட்டுமில்லாமல், உடல், உறுப்பு தானம் போன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக திருமண விழாவிற்கு வந்திருந்தவர்கள் தெரிவித்தனர். மேலும், இதுபோன்று அனைத்து விஷேச நிகழ்வுகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினால், உடல், உறுப்புகளுக்காகக் காத்திருப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். தங்கள் இல்லங்களில் நடக்கும் விழாக்களிலும் இதுபோல உடல் உறுப்பு தான நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்து இருக்கிறோம் என அவர்கள் கூறினர்.

வழக்கமாக திருமணம் போன்ற விழாக்களில் இறப்பு பற்றி பேசுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால், இந்த திருமண வரவேற்பு விழாவில் உடல், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதாகத் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். திருமண விழாவிற்கு வந்தவர்கள் ஆர்வத்துடன் வந்து விசாரித்து சென்றனர். இதுவரை 40 பேர் உடல், உறுப்பு தானம் செய்யப்பதிவு செய்திருப்பதாக அந்தத் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறினர்.



"உடல், உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திருமணப் பத்திரிகை கொடுக்கும்போதே இதுபோன்ற உடல், உறுப்பு தானம் நிகழ்ச்சி நடைபெறுவது பற்றி தெரிவித்திருந்தோம்," எனக் கூறுகின்றனர் புதுமணத் தம்பதிகள். 

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...