காவிரி விவகாரத்திற்கும், கர்நாடக தேர்தலுக்கும் தொடர்பில்லை: கோவையில் எச்.ராஜா பேட்டி

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு கால அவகாசம் கேட்டதற்கும், கர்நாடகா தேர்தலுக்கும் எந்தவித சமந்தமும் இல்லை என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.


கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு கால அவகாசம் கேட்டதற்கும், கர்நாடகா தேர்தலுக்கும் எந்தவித சமந்தமும் இல்லை என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேட்டில் பா.ஜ.க மாவட்ட தலைவர் நந்தகுமார் இல்லத்திற்கு இன்று அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

கோவையில் மாவட்ட தலைவர் நந்தகுமார் இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாதது வருத்தமளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதித்துள்ளது. தமிழகத்தில் வன்முறையை ஏற்படுத்த தலைமை ஏற்கும் கட்சியாக எதிர்க்கட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது.

மேலும், மக்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு இங்கு யாரும் போராடுவதில்லை. மத்திய அரசுக்கும், பக்கத்து மாநிலத்திற்கும், இலங்கைக்கும் எதிராகத் தான் இங்கு போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழகம் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுவதாக அவர்கள் சித்தரிக்கிறார்கள்.

தொடர்பு இல்லை

காவிரி விவாகரத்தில் மத்திய அரசு தெளிவான முடிவை எடுக்கும். நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டது போல 9 பேர் கொண்ட குழுவை சம்மந்தப்பட மாநிலங்கள் ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும். அதில் கேரளாவும் கர்நாடகாவும் இன்னும் உறுப்பினர்களை நியமிக்கவில்லை. அவர்களை நியமிக்கும் வரை மேலும் இரண்டு வார கால அவகாசத்தை மத்திய அரசு கேட்டிருக்கலாம். அப்படியும் அவர்கள் நியமிக்கப்படவில்லை என்றால் நீதிமன்றமே நியமிக்கச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கும். அப்போது மத்திய அரசு, மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசு கால அவகாசம் கேட்டதற்கும், கர்நாடக தேர்தலுக்கும் எந்த வித சமந்தமும் இல்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தி.மு.க தற்போது அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்கிறார்களா?.

குட்கா விவாகரத்தில் சி.பி.ஐ நேர்மையாக விசாரணை செய்யும். பத்திரிக்கையாளர் குறித்த எஸ்.வி.சேகரின் பதிவு தவறானது அவர் மீது சிலர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள் அது பற்றி நீதிமன்றம் முடிவு எடுக்கும்." என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...