மறைந்த ஆசிரியர்கள் நினைவாக குருபூஜை

கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள வீரமாருதி தேகப்பயிற்சி சாலை சார்பில் மறைந்த ஆசிரியர்கள் நினைவாக குருபூஜை நடைபெற்றது.

கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள வீரமாருதி தேகப்பயிற்சி சாலை சார்பில் மறைந்த ஆசிரியர்கள் நினைவாக குருபூஜை நடைபெற்றது.

மறைந்த பயில்வான் பழனியப்ப தேவர், சாண்டோ சின்னப்ப தேவர், கந்தசாமி ஆகியோரின் முயற்சியில் வீரமாருதி தேகபயிற்சி சாலை பயிற்சி கூடம் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கபட்டது.

இந்த உடற்பயிற்சி சாலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரன், நம்பியார் கருணாநிதி ஆகியோர் இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் சின்னப்பா தேவர் அவர்களுக்கும் சினிமாவை தாண்டி நல்ல ஒரு நட்பு நிலவியதற்க்கு இந்த உடற்பயிற்சி கூடமும் ஒரு காரணமாக இருந்தது. ஆரம்ப காலத்தில் சினிமா படங்கள் கோவை பகுதிகளில் அமைந்திருந்த பச்சிராஜா ஸ்டுடியோ, செண்டரல் ஸ்டுடியோ ஆகியன இங்கிருந்ததும் ஏராளமான திரைபடங்கள் இங்கு எடுக்கபட்டதும் ஒரு காரணமாக இருந்தது. 

இதன் ஒரு பகுதியாக முன்னாள் உடற்பயிற்சி ஆசிரியர்களை நினைவு கூறும் வகையில் 23வது குருபூஜை இன்று நடைபெற்றது. பஜனை பாடல்களுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. முன்னதாக முன்னாள் ஆசிரியர்களின் உருவ படங்கள் மலர்களால் அலங்கரிக்கபட்டு மலர் அஞ்சலி செலுத்தபட்டது. இந்நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.



Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...